தடையை மீறி 5 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு: அதிரடி நடவடிக்கையில் இறங்கிய காவல்துறை

22 August 2020, 1:54 pm
Quick Share

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் தடையை மீறி வைத்து வழிபாடு செய்யப்பட்ட 5 விநாயகர் சிலைகளை காவல்துறையினர் கைப்பற்றி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நோய் நோய் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.‌ இந்நிலையில் பொதுமக்கள் நலன் கருத்தில் கொண்டு விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து விழா கொண்டாடுவதையும் மற்றும் ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பதையும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.‌

ஆனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சிறிய அளவில் சிலைகள் வைத்து கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருப்பத்தூர் நகரில் உள்ள கௌதம்பேட்டை,பெரியார் நகர்,உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்த 5 விநாயகர் சிலைகள் வைத்துள்ளதாக திருப்பத்தூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் பேபிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தடையை மீறி வைக்கப்பட்டிருந்த ஐந்து சிலைகளையும் கைப்பற்றி திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..

Views: - 26

0

0