தமிழ்நாடு கூடோ விளையாட்டு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்: பல்வேறு மாவட்டங்களில் இருந்து பயிற்சியாளர்கள் பங்கேற்பு

18 April 2021, 4:16 pm
Quick Share

திருச்சி: தமிழ்நாடு கூடோ விளையாட்டு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் கருப்பு பட்டை வழங்கும் நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு கூடோ விளையாட்டு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் கருப்பு பட்டை வழங்கும் நிகழ்ச்சி திருச்சியில் தனியார் ஹோட்டலில் பயிற்சியாளரும், மாநில தலைவருமான கந்தமூர்த்தி தலைமையில் பயிற்சியாளர் சந்துரூ முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி, சென்னை, திருவாரூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் தொடர்ந்து நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டிகள், மாநில மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், கூடோ பயிற்சியில் வெற்றி பெற்ற பயிற்சியாளர்களுக்கு கருப்பு பட்டை வழங்கப்பட்டது. மேலும், தமிழகம் முழுவதும் கூடோ விளையாட்டு சங்கத்திற்கான பயிற்சியாளர் நியமனம் மற்றும் மாவட்ட தோறும் பயற்சி பள்ளிகள் அங்கீகாரம் அளிக்கப்பட்டு அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

Views: - 10

0

0