காதல் விவகாரத்தால் காதலியின் தந்தை வெட்டி படுகொலை: காதலனுக்கு போலீஸ் வலைவீச்சு

13 August 2020, 11:01 pm
Quick Share

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே காதல் விவகாரத்தில் பெண்ணின் தந்தையையே வெட்டி கொன்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் தணிகைமணி- (வயது43.)இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் மாட்டுக்கறி விற்பனை கடையில் வேலை பார்த்து வந்த வடபாதி பகுதியை சிலம்பரசன் என்பவருக்கும், தணிகை மணியின் மூத்த மகளுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இவ்விரு தரப்பிற்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது‌.

இந்நிலையில் இன்று மாலை மகளின் காதல் விவகாரம் குறித்து காதலன் சிலம்பரசனை தணிகைமணி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிலம்பரசன் மற்றும் அவரது கூட்டாளிகளான விஜி, பீடிநகர் பகுதியை சேர்ந்த அக்கு , மளிகைகடை ராதா, சிவராமன், தஷ்ணாமூர்த்தி என 6 பேர் கொண்ட கும்பல் சேர்ந்து கறிவெட்டும் கத்தியால் தணிகைமணியை சரமாரியாக கழுத்தில் வெட்டியதில் அலறி அடித்து ஓடிய தணிகைமணி அருகில் உள்ள பனந்தோப்பில் சரிந்து விழுந்திருக்கிறார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆட்டோவில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சில நிமிடங்களிலே தணிகைமணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த செங்கல்பட்டு தாலுக்கா காவல்துறையினர் கொலையாளிகளை தேடி வருகின்றனர். காதல் விவகாரத்தில் பெண்ணின் தந்தையையே வெட்டி கொன்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 11

0

0