தக்காளி விற்பது போல் ஆடுகள் திருட முயன்றவர்களுக்கு விழுந்த தர்ம அடி…

4 August 2020, 9:03 pm
Quick Share

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே தக்காளி விற்பதுபோல் கிராம பகுதியில் ஆடுகளை திருட முயன்றவர்களை சரமாரியாக தாக்கி காவல்துறையினரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதிக்கு மூன்று சக்கர வாகனத்தில் தக்காளி விற்பது போல் இரண்டு மர்ம நபர்கள் வந்துள்ளனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரின் கொட்டகையில் கட்டி வைத்திருந்த இரண்டு ஆடுகளை திருட முயன்றுள்ளனர். இதைபார்த்த அப்பகுதி பொதுமக்கள் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். ஆனால் பொதுமக்கள் அவர்களை விடமால் விரட்டி பிடித்து சரமாரியாக தாக்கி அருகில் இருந்த வீட்டில் அடைத்து விட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை கைது செய்து விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர் ஆம்பூர் கம்பிக்கொல்லை பகுதியை சேர்ந்த ராஜ் மற்றும் பெருமாள் என்பது தெரியவந்தது. மேலும் இருவரும் வேறு எங்காவது கைவரிசையில் ஈடுப்பட்டுள்ளனரா என விசாரணை நடத்தி வருகிறனர். அவர்கள் திருடுவதற்கு பயன்படுத்திய மூன்று சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Views: - 11

0

0