மக்களை காக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் கடவுள்… அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு…

11 August 2020, 11:16 pm
Rb Udayakumar -Updatenews360
Quick Share

சென்னை: எண்ணூரில் எம்ஆர்எப் நிறுவனம் சார்பில் 850 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்

சென்னை எண்ணூரில் தனியார் திருமண மண்டபத்தில் ஆல் இந்தியா ரேடியோ நகரில் வசிக்கும் 800 பேருக்கு எம்ஆர்எப் நிறுவனம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:- கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட கிருஷ்ண ஜெயந்தி உதவும். மக்களை காக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் கடவுள்களாக உள்ளனர்.

குணமடைந்தோரின் புள்ளிவிவரம் நமக்கு ஆறுதல் தரக்கூடிய தகவலாக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருப்பவர்கள் மீண்டு வர கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் பிரார்த்திப்போம். கேரளாவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு தேவையான உதவிகளை செய்யும். கேரள முதல்வரிடம் தமிழக முதல்வர் உதவி செய்வதாக கூறியுள்ளார். நீலகிரி பகுதியில் தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அதிமுக 14, திமுக 15 என 29 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மேற்கொள்ளும் செலவுகளின் விவரங்கள் அளிக்கப்பட்டபின் சுகாதார துறையினரின் ஆய்வுக்கு பின்னர் அவர்களுக்கு கிளைம் வழங்கப்படும்.

சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய சொந்த விருப்பத்தின் மூலமே தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்கின்றனர் என அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மாதவரம் மூர்த்தி, முன்னாள் எம்எல்ஏ குப்பன், எம்ஆர்எப் நிறுவனத்தின் சார்பில் மூத்த பொது மேலாளர் கே.வி.எஸ்.ரவிபிரகாஸ், கிளை மேலாளர் ஜாக்கப் சி.ஜாகோ, மக்கள் தொடர்பு அதிகாரி நந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Views: - 8

0

0