கோகுல்ராஜ் கொலை வழக்கு: ரகு மற்றும் ரஞ்சித் ஜாமீன் மனு ஒத்திவைப்பு ..

29 August 2020, 2:43 pm
Quick Share

மதுரை: பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரகு, மற்றும் ரஞ்சித் இருவரும் ஜாமீன் கோரிய வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்து உத்தரவிட்டது.

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கடந்த 2015 ஆண்டு காதல் விவகாரத்தில் ஆணவக் கொலை செய்யபட்டார். இந்த வழக்கு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் திருச்செங்கோட்டைச் சேர்ந்த ரகு மற்றும் ரஞ்சித் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கோரி மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம்.

இந்த வழக்கை சேலத்தில் இருந்து மதுரை நீதித்துறை நடுவர் எண் 3 வழக்கு விசாரணை மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி மதுரை நீதித்துறை நடுவர் முன்பாக விண்ணப்பித்த நிலையில் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துவிட்டனர். இருவரும் உடல் நல குறைவால், சிரமத்திற்கு உள்ளாகி வரும் நிலையில் இவற்றைக் கருத்தில் கொண்டு இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தனர். இந்த வழக்கு நீதிபதி தாரணி முன் விசாரணைக்கு வந்த போது இந்த வழக்கில் மேலும் சிலர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யதுள்ளதால் அனைத்து வழக்கையும் ஒன்றாக பட்டியிலட உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்தனர்..

Views: - 25

0

0