உரிய ஆவணங்கள் இன்றி ரயிலில் கொண்டு வரப்பட்ட தங்க நகைகள்: பயணிகளுக்கு அபராதம் விதித்த அதிகாரிகள்

Author: kavin kumar
27 August 2021, 2:58 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் உரிய ஆவணங்கள் இன்றி ரயிலில் கொண்டு வரப்பட்ட 1.5கோடி மதிப்புள்ள தங்க நகைகளுக்கு வணிகவரித்துறை அதிகாரிகள் 9 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை ரயில்வே காவல் துறையினர் ஸ்கேனர் மிஷின் உதவியுடன் சோதனை செய்த பின்னர் ரயில் நிலையத்திற்குள் அனுமதிப்பது வழக்கம். அதன்படி பயணிகளின் உடமைகளை ஸ்கேனர் மூலம் காவல்துறை சோதனை செய்து வந்தனர் அப்போது இரண்டு பயணிகளின் உடமைகளை சோதனை மேற்கொண்ட போது அவரது பையில் அளவுக்கதிகமான நகைகள் இருப்பது தெரியவந்தது. அவர்களை ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சென்னை சவுக்கார்பேட்டை பகுதியை சேர்ந்த லப்பைதம்பி மற்றும் முகமதுரியாஸ் என தெரியவந்தது. மேலும், அவர்கள் கொண்டு வந்த பையில் சுமார் 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான 3 கிலோ 250 கிராம் தங்கச் செயின், நெக்லஸ் மற்றும் மோதிரங்கள் இருந்தது தெரியவந்தது.

இதற்கான ஆவணங்களை காவல்துறையினர் கேட்டபோது இருவரிடமும் இல்லை. மேலும் மயிலாடுதுறை மற்றும் சென்னையில் உள்ள தங்களது நகைக்கடைக்கு வாங்கிய நகைகள் என கூறினர். உரிய ஆவணங்கள் இல்லாதததால் இது குறித்து ரயில்வே காவல்துறையினர் வணிகவரித் துறை அலுவலகத்திற்கு தகவல் கெடுத்தனர். வணிகவரித்துறை அதிகாரிகள் அவர் அழைத்துச் சென்று தங்க நகையை மதிப்பிட்ட பின் அதற்கான வரி அவர்கள் செலுத்தாததால் 9 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதனை தொடர்ந்து லெப்பைதம்பி அபராத தொகையை கட்டினார். பின்னர் லெப்பைதம்பியிடம் நகைகளை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

Views: - 213

0

0