சர்வதேச அளவிலான நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம்: சாதனை படைத்த இளைஞர்

Author: Udhayakumar Raman
24 March 2021, 7:54 pm
Quick Share

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் சர்வதேச அளவிலான நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் ஏரவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆல்ட்ரின்ஆம்ஸ்ட்ராங்(30). இவர் ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சிறு வயது முதலே நீச்சல்போட்டி, ஈட்டிஎறிதல் போன்ற பல போட்டிகளில் ஆர்வம்கொண்டிருந்த இவர், கிராமத்தில் உள்ள ஊர்பொதுக்குளத்தில் நீச்சல் பயிற்சி பெற்று பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் கோவாவில் நடந்த அகில இந்திய அளவிலான போட்டியில் தமிழகம் சார்பில் கலந்துகொண்டு 100மீ நீச்சல் போட்டியில் தங்கம் வென்றார். அதனையடுத்து தற்போது நேபாலில் நடந்த நீச்சல் போட்டியில் தமிழக அணிசார்பில் கலந்துகொண்டு ஆல்ட்ரின்ஆம்ஸ்ட்ராங் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு ஜங்ஷனுக்கு ஆல்ட்ரின்ஆம்ஸ்ட்ராங்க வந்தபோது வக்கீல் சங்கமித்திரன் தலைமையில் கிராம மக்கள், உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Views: - 58

0

0