NEET மற்றும் JEE நுழைவுத் தேர்வு விவகாரத்தில் விரைவில் நல்ல தீர்ப்பு வரும்: அரசு கொறடா அனந்தராமன் பேட்டி…

29 August 2020, 5:24 pm
Quick Share

புதுச்சேரி: NEET மற்றும் JEE நுழைவுத்தேர்வுகளை ரத்து செய்யக்கோரி புதுச்சேரி அரசு சார்பில் உச்ச நீதி மன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என நம்புவதாக அரசு கொறடா அனந்தராமன் தெரிவித்துள்ளார்

புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் அரசு கொறடா ஆனந்தராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தற்போதுள்ள ஊரடங்கு காலத்தில் மாணவர்கள் போதிய பயிற்சி வகுப்புகள் செல்ல முடியாமல் இருக்கும் சூழலில், மத்திய அரசு இந்த தேர்வுகளை நடத்துவது மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் செயல் என்றும், ஆகவே புதுச்சேரி முதல்வர் அவர்களின் ஆலோசனைப்படி மத்திய அரசு அறிவித்துள்ள NEET மற்றும் JEE தேர்வுகளை ரத்து செய்யக்கோரி உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கு மீதான விசாரணை அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளதாகவும், இதில் உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும் என நம்புவதாக அனந்தராமன் தெரிவித்தார்.

Views: - 37

0

0