சாலையோர கடையில் தீவிபத்து: விரைந்து செயல்பட்ட தீயணைப்புத்துறையினர்…!!

3 March 2021, 11:01 am
kachipuram - updatenews360
Quick Share

காஞ்சிபுரம்: சாலையோர கடையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தில் பல ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.

காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரே நடைபாதை ஓரத்தில் சிறிய காலணி கடை ஒன்று உள்ளது. நேற்று இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு அதன் உரிமையாளர் சென்ற பிறகு திடீரென கடையில் இருந்து புகை வர தொடங்கியது.

அதன் பிறகு கடை முழுவதும் மளமளவென தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கொழுந்துவிட்டு எரிந்த தீயை உடனடியாக அணைத்தனர்.

இதனால் அருகாமையில் இருந்த மற்ற கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. காலணி கடையில் மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீவிபத்தில் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் நஷ்டம் ஆனதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

Views: - 7

0

0