பேருந்துகளை இயக்க முற்பட்டபோது தடுத்து நிறுத்திய அரசு பேருந்து ஓட்டுநர்கள்

27 February 2021, 3:26 pm
Quick Share

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அரசு போக்குவரத்து பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளை தற்காலிக ஓட்டுனர்களை வைத்து இயக்க முற்பட்டபோது அரசு பேருந்து ஓட்டுநர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரசு போக்குவரத்து கழக கிளையில் பணியாற்றும் ஓட்டுநர்கள் நடத்துநர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது குறித்து 14 வது ஊதிய ஒப்பந்த குழு பரிந்துரையை அமல்படுத்த வலியுறுத்தியும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் அந்தந்த பகுதிகளில் உள்ள போக்குவரத்து பணிமனை முன்பு மூன்றாவது நாளாக தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கிளை போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பணிமனை முன்பு 50கும் மேற்பட்டோர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று கோபிசெட்டிபாளையம் போக்குவரத்து கழக அலுவலர்கள் தற்காலிக ஓட்டுநர்கள் வரவழைத்து அரசு பேருந்துகளை இயக்க முற்பட்டபோது, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஓட்டுநர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட தனியார் ஓட்டுநரை காவல்துறையினர் பணிமனைக்கு வெளியில் அனுப்பி வைத்தனர். இதனால் பணிமனை முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 7

0

0