பயணிகள் இல்லாததால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் அரசு பேருந்து

3 September 2020, 8:57 pm
Quick Share

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்திற்கு செல்லும் பேருந்துகளில் பயணம் செய்ய போதிய பயணிகள் இல்லததால் பேருந்துகள் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று பயணிகளை ஏற்றி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா பொதுமுடக்கத்தால் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து போக்குவரத்து கடந்த ஜூன் 1 முதலும், தனியாா் பேருந்துகள் ஜூன் 10 முதலும் இயங்கின. பின்னா், ஜூலை மாதத்தில் மீண்டும் பேருந்துப் போக்குவரத்து முடக்கப்பட்டது. தற்போது 4 ஆம் கட்டத் தளா்வுகளில் செப். 1 முதல் மாவட்டத்துக்குள் மட்டும் பேருந்துகளை இயக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, தமிழகம் முழுவதுத் பேருந்துப் போக்குவரத்து செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் இயக்கப்பட்டது. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக மாவட்ட எல்லைக்குள் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த பேருந்தில் போதிய பயணிகள் இல்லாததாலும் பயணிகள் கேட்டுக் கொண்டதாலும் செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூருக்கும், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் தாண்டி பயணிகள் பேருந்து விட்டதால் தொடர்ந்து இந்த தடத்தில் பேருந்துகள் இயக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Views: - 0

0

0