அரசு விரைவு பேருந்துகள் பகலில் மட்டுமே இயக்கம்: அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்

20 April 2021, 6:54 pm
bus - updatenews360
Quick Share

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால் அரசு விரைவு பேருந்துகள் பகலில் மட்டுமே இயக்கப்படும் என அரியலூர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு கொரோனா தொற்றை கட்டுபடுத்துவதற்காக இரவு நேர ஊரடங்கை இன்று முதல் அமுல்படுத்தியுள்ளது. இதனையொட்டி அரியலூர் மாவட்டத்தில் பகல் நேரங்களில் இயக்கபடும் பேருந்துகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி போக்குவரத்து இயக்கபட்டு வருகின்றது. அரியலூர் மாவட்டத்தை பொறுத்தவரை சென்னை, கோயம்புத்தூர், தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பேருந்துகள் காலை முதலே இயக்கபட்டு வருகின்றது. பகலில் மட்டும் பேருந்து இயக்கபடுவதால் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. மேலும் ஞாயிற்றுகிழமைகளில் முன்பதிவு செய்துள்ள பயணிகளின் கட்டண தொகை திருப்பி வழங்கபடும் என அரியலூர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Views: - 17

0

0