கணவரை பிரிந்து வாழ்ந்த அரசு பெண் மருத்துவர் திடீர் தற்கொலை: உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை

Author: Udhayakumar Raman
20 September 2021, 6:31 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் கணவரை பிரிந்து வாழ்ந்த அரசு பெண் மருத்துவர் திடீர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி சுப்ரமணியபுரம் ஏரிகரை ரோடு பகுதியை சேர்ந்தவர் சஞ்சினி. இவர் குழந்தைகள் நல மருத்துவராக தஞ்சை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு வயதில் குழந்தை உள்ளது. இவருடைய கணவர் கோகுல் துறையூரைச் சேர்ந்த மருத்துவர். கடந்த 3 மாதத்திற்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். மேலும் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தனது ஒரு வயது மகன் சஞ்சினிக்கு காதணி விழா நடத்தினார்.

பின்னர் வழக்கம்போல அனைவரும் தூங்கச் சென்றனர். இந்நிலையில் காலை வெகு நேரமாகியும் அவரின் அறையில் கதவு திறக்கப்படாததால் உறவினர் சந்தேகம் ஏற்பட்டு திருச்சி கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடலை கைப்பற்றிய காவல்துறையினர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா, வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 134

0

0