அரசு மதுபான கடையின் பூட்டை உடைத்து திருட்டு: மதுபாட்டில் மற்றும் பணம் கொள்ளை

4 July 2021, 3:51 pm
Quick Share

விருதுநகர்: சாத்தூர் அருகே கோட்டையூர் அரசு மதுபான கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தாயில்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கோட்டையூர் பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள அரசு மதுபான கடையின் ஊழியர் நேற்று இரவு வியாபாரம் முடித்து கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். வழக்கம் போல் இன்று காலை கடையை திறப்பதற்காக வந்த பொழுது கடையின் பூட்டு காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலறிந்த வெம்பக்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரனை செய்து வருகின்றனர். மேலும் விசாரனையில் 40க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களும் ரூ. 5, 700 பணமும் திருடு போயுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் திருடிய மர்ம நபர் குறித்து தடயவியல் நிபுணர்கள் வந்து கைரேகை குறித்து ஆய்வு நடத்தினர். மேலும் மேப்பநாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு சாத்தூர் காவல்துணை கண்காணிப்பாளர் நாகராஜ் நேரில் சென்று விசாரனை நடத்தினார்.

Views: - 102

0

0