பேரிடர்களை எதிர்கொள்ள அரசு இயந்திரம் தயார்: முதல்வர் நாராயணசாமி பேட்டி

Author: Udayaraman
15 October 2020, 11:58 pm
Quick Share

புதுச்சேரி: வடகிழக்கு பருவமழையினையும், புயல், கனமழை உள்ளிட்ட பேரிடர்களை எதிர்கொள்ள அரசு இயந்திரம் தயார் நிலையில் உள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் எதிர்வரும் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்வது தொடர்பாக மாநில பேரிடர் துறை சார்பாக ஆலோசனை கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது இதில் அமைச்சர்கள் தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு துறை செயலர்கள் பங்கேற்றனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி மிகப்பெரிய மழை, வெள்ளம் வந்தால் தடையில்லாமல் மின்சாரம் வழங்கவும்,

தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழை நீரை வெளியேற்றவும், பாதுகாப்பான பகுதிகளில் பொதுமக்களை தங்க வைக்கவும் அவர்களுக்கு தேவையான உணவு வழங்கவும் இன்று நடந்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டதாகவும், மருத்துவத்துறை சார்பாக டெங்கு, மலேரியா போண்ட நோய் பரவாமல் இருக்க கிருமி நாசினி தெளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றும், தேவையான மருந்துகளை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், மழை நேரங்களில் ஏற்படும் தொற்று நோய்களுக்கு அவரவர் வீடுகளுக்கு சென்றே மருந்து மற்றும் ஊசிகள் போட அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்த நாராயணசாமி,

தற்போது வரும் வடகிழக்கு பருவ மழை அதிகளவு பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாகவும் அதனால் பொதுப்பணித்துறை சார்பில் உப்பனாரு, உள்ளிட்ட அனைத்து வடிகால் வாய்க்கால்களையும் தூர் வாரி தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்காமல் உடனடியாக கடலில் கலக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மொத்தத்தில் இந்த வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள புதுச்சேரி அரசு இயந்திரம் தயார்நிலையில் உள்ளது என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Views: - 33

0

0