தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் வாக்களிப்பு

6 April 2021, 1:54 pm
Quick Share

கன்னியாகுமரி: கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், தோவாளை பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், தோவாளை பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். இதைதொடர்ந்து நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் எம்.ஆர். காந்தி பழவிளை பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்கு பதிவு செய்தார்.

Views: - 31

0

0