பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு உறுதிமொழி ஏற்ற அரசு துறை அலுவலர்கள்

Author: Udhayakumar Raman
17 September 2021, 6:28 pm
Quick Share

தருமபுரி: பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 143 ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு சமூகநீதி நாளாக கடைபிடித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

தமிழக முதல்வர் கடந்த 06ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் என போற்றப்படும் ஈ.வெ. இராமசாமி அவர்களின் அறிவுச்சுடரை போற்றும் விதமாக அவரது பிறந்த தினமான செப்டம்பர் 17-ஆம் நாளை ஆண்டுதோறும் சமூகநீதி நாளாக கொண்டாடுவதென்று அறிவித்தார்கள். இதனை முன்னிட்டு தந்தை பெரியாரின் 143 வது பிறந்த நாளான இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தலைமையில் தந்தை பெரியார் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

அதனையடுத்து சமூக நீதி நாள் உறுதிமொழியினை வாசிக்க அனைத்து அரசு அலுவலர்களும் பின் தொடர்ந்து வாசித்து உறுதிமொழியினை ஏற்றுகொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நாராயணன், தனித்துணை ஆட்சியர் சாந்தி உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Views: - 120

0

0