காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அரசு மரியாதை

15 July 2021, 1:54 pm
Quick Share

விருதுநகர்: பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 119 பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகரில் காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி மற்றும் காவல்த்துறை கண்காணிப்பாளர் மனோகர் மாலை அணிவித்து அரசு மரியாதை செலுத்தினர்.

காமராசரின் 119வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது விருதுநகரில் அவரது நினைவு இல்லத்தில் உள்ள திருஉருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமசுப்பிரமணியன் மேலும் மக்கள் செய்தி தொடர்பு துறை அதிகாரி வெற்றிச்செல்வன் ஆகியோரும் காமராஜர் அவர்கள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் குத்து விளக்கு ஏற்றி மாரியாதை செலுத்தினார். இதை அடுத்து காமராஜர் நினைவிடத்தில் உள்ள அவரது புகைப்படங்களை பார்வையிட்டார்.

Views: - 56

0

0