லஞ்சம் தர மறுப்பதால் அரசு அதிகாரி கொலை மிரட்டல்:மாவட்ட குவாரி உரிமையாளர்கள் புகார்

Author: Udhayakumar Raman
18 October 2021, 7:31 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகரில் லஞ்சம் தர மறுப்பதால் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரி கொலை மிரட்டல் விடுப்பதாக விருதுநகர் மாவட்ட குவாரி உரிமையாளர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் 100க்கு மேற்பட்ட கல் குவாரிகள் அரசு அனுமதியுடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட குவாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் அதன் தலைவர் ராஜேந்திரன், செயலர் நாராயணபெருமாள்சாமி, பொருளாளர் தனபாலன் உள்பட 60க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் விருதுநகர் மாவட்ட எஸ்.பி. மனோகரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் குவாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் செயலர் நாராயணபெருமாள்சாமி யை கொலை செய்து விடுவோம் என புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரி ஒருவர் மிரட்டுவதும், கொலைக்குற்றம் செய்து நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்த கடும் குற்றவாளிகளுடன் அதிகாரிகளும்,

அரசியல்வாதிகளும் குவாரிகளில் மாதந்தோறும் வசூல் செய்யும் மாபியாக்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அவர்கள் மூலம் எங்களது சங்கச் செயலரை நேரிலும், அலைபேசியிலும் அச்சுறுத்துகின்றனர். செயலரின் உயிருக்கும், உடமைகளுக்கும் கேடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவலர்கள் வருகின்றன.இப்புகார் காரணமாக அதிகாரிகளுக்கும் அரசியல்வாதி களுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஆத்திரம் கொண்டு எங்களது சங்க செயலரின் உயிருக்கும் உடமைகளுக்கும் கேடுசெய்யத் திட்டமிட்டு வருகின்றனர். எனவே, சங்கச் செயலர் நாராயணபெருமாள் சாமிக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என மனுவில் கோரிக்கை விடுத்தனர்.

Views: - 120

0

0