பேரூராட்சியில் பணிபுரிந்து பட்டதாரி பெண் திடீரென வேலையைவிட்டு நிறுத்தம்: குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்ட பெண்

Author: Udhayakumar Raman
23 July 2021, 3:33 pm
Quick Share

திண்டுக்கல்: அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் 8 ஆண்டுகளாக தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்த பட்டதாரி பெண்ணை திடீரென வேலையைவிட்டு நிறுத்தியதாக கூறி குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் கடந்த 8 ஆண்டுகளாக தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக அதே பேரூராட்சிக்குப்பட்ட இராஜதானிக்கோட்டையைச் சேர்ந்து பானுப்பிரியா(33) என்ற பட்டதாரிப் பெண் பணிபுரிந்து வந்துள்ளார். ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு பேருராட்சி செயல் அலுவலர் திடீரென அப்பெண்ணை வேலையை விட்டு நிறுத்தியதாக கூறி இன்று பேரூராட்சி அலுவலாம் முன்பு தன் கணவர் இரண்டு குழந்தைகள் உட்பட குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளர் சண்முகப்பிரியா தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மேலும் மாவட்ட ஆட்சியர் வருவாய் அலுவலர் உட்பட உயர் அதிகாரியிடம் முறையிடவும் தற்போது கொரோனா தடைகாலம் முழுமையாக நீக்கப்பட வில்லை எனவும், இதுபோன்ற போராட்டங்களுக்கு அனுமதி இல்லை எனக்கு கூறி சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

இதுகுறித்து பனுப்பிரியா கூறுகையில், தான் கடந்த 8 ஆண்டுகளாக இதே பேரூராட்சியில் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வருவதாகவும், தன் மீது இதுவரை எந்த ஒரு குறையோ புகாரோ வந்ததில்லை எனவும், ஆனால் தற்போதுள்ள செயல் அலுவலர் சென்னை எந்தவித காரணமும் இன்றி திடீரென வேலையை விட்டு நிறுத்தியதாகவும், இதனால் ஏற்கனவே என் கணவர் வேலையின்றி உள்ள நிலையில் தனது குழந்தைகள் படிப்பு முதல் தாய் தந்தை மருத்துவம் உட்பட தனது குடும்பமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது எனவும், தான் ஏற்கனவே 8 ஆண்டுகளுக்கும் மேலாக இதே பேரூராட்சியில் பணிபுரிந்து விட்ட நிலையில் தற்பொழுது வயது 33 -க்கு மேல் ஆகி விட்ட நிலையில் வேறெந்தப் பணிகளிலுக்கும் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், எனவே தனக்கு மீண்டும் அதே பணி வழங்க வேண்டும் என கூறி தமிழரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் வேண்டுகோள் விடுத்தார்.

Views: - 102

0

0