தார் சாலை போட்ட சில நாளிலேயே புல் முளைத்து கொடுமை: மீண்டும் தரமாக சாலை அமைத்து தரக் கோரி பொதுமக்கள் கோரிக்கை

21 July 2021, 3:56 pm
Quick Share

திருச்சி: திருச்சி அருகே தார் சாலை போட்ட சில நாளிலேயே புல் முளைத்தால் மீண்டும் தரமாக சாலை அமைத்து தரக் கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்துள்ள திருநெடுங்களம் பகுதியில் கடந்த 2020-21வது நிதியாண்டில் சாலை விரிவாக்கத் திட்டத்தின் கீழ் ரூபாய் 6 லட்சம்நிதி ஒதுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தார் சாலை போடப்பட்டது.அப்படி போடப்பட்ட சாலை மிகவும் தரம் இல்லாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் ஏற்கனவே குற்றச்சாட்டு கூறிவந்தனர். இந்நிலையில், ஒரு சில நாட்களிலேயே சாலையின் நடுவே புல்கள் முளைக் துவங்கியது. எனவே, அந்த சாலையை சீரமைத்து மீண்டும் தரமான முறையில் அமைத்து தர வேண்டும் என பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 91

0

0