அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பசுமை காய்கறி தோட்டம் : அரசு தலைமை கொறடா தொடங்கி வைத்தார்!!

19 November 2020, 1:57 pm
Ariyalur Garden- Updatenews360
Quick Share

அரியலூர் : மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பசுமை காய்கறி தோட்டம் அமைக்கும் பணியினை அரசு தலைமை கொறடா தொடங்கி வைத்தார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பசுமை தோட்டம் அமைக்கு பணிக்கான வேலைகள் தீவிரமாக நடைப்பெற்று வந்தன. இந்நிலையில் குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கபட்டுள்ள தோட்டத்தில் பசுமை காய்கறி விதைகளையும், பழமரக்கன்றுகளையும் அரசு தலைமை கொறடா தாமரை. இராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் ரத்னா நட்டு வைத்தனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 20 சென்ட் பரப்பளவில் மாதுளை, கொய்யா, வாழை, நெல்லி, பப்பாளி உள்ளிட்ட பழமரக்கன்றுகளும், தக்காளி, வெண்டை, கத்தரி உள்ளிட்ட காய்கறி விதைகளும் நடவு செய்யபட்டன.

மேலும் வீட்டில் தோட்டம் அமைக்க விரும்புபவர்களுக்கும் தோட்டக்கலை துறை மூலம் விதைகளும், ஆலோசனைகளும் வழங்கபடும் என அரசு தலைமை கொறடா தெரிவித்து கொண்டார்.

முன்னதாக உயிர்காக்கும் கருவிகள் பொருத்தபட்ட ஆம்புலன்ஸ் சேவையினை அரசு தலைமை கொறடாவும், மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான அரசுதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Views: - 0

0

0

1 thought on “அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பசுமை காய்கறி தோட்டம் : அரசு தலைமை கொறடா தொடங்கி வைத்தார்!!

Comments are closed.