தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர்

13 April 2021, 3:56 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவம், இரட்டை இலைச் சின்னத்தை தர்பூசணியில் வரைந்து தண்ணீர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் பொதுமக்களுக்கு முக கவசங்களை வழங்கினார்

திருவள்ளூர் மாவட்டம் தண்டலம் லட்சிபாலவாக்கம் போந்தவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் தண்ணீர் பந்தல்களை பட்டாசு வெடித்து ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார் பின்னர் பொதுமக்களுக்கு இளநீரைஅவரே வெட்டி அனைவருக்கும் வழங்கினார். அப்போது தர்பூசணி பழத்தில் இரட்டை இலைச் சின்னம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவத்தை வரைந்து குளிர்பானம் மோர் பழ வகைகளை வழங்கினார் தற்போது கொரானா வைரஸ் தொற்று பரவல்அதிகரித்து வருவதால் முக கவசம் அணியாதவர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கி பேருந்து ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் பயணம் செய்தவர்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார். சுட்டெரிக்கும் வெய்யிலில் வாடிய பொதுமக்களுக்கு குளிர்பானம், பழ வகைகளை வழங்கியதுடன் அனைவருக்கும் முக கவசம் வழங்கியது பொது மக்களின் பாராட்டைபெற்றது.

Views: - 10

0

0