மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி வழங்கிய கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ

20 June 2021, 6:28 pm
Quick Share

திருவள்ளூர்: மாதர்பாக்கம் பகுதியில் மாற்றுத்திறனாளி பெண் அம்பிகா என்பவருக்கு தேர்தல் வாக்குறுதிஅளித்ததின் பேரில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன்
நகரும் சக்கர நாற்காலியினை அவரது வீட்டிற்கே சென்று நேரில் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அம்பிகா. மாற்றுத்திறனாளியான இவர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரிடம் தனக்கு தேர்தலில் வெற்றி பெற்றால் நகரும் சக்கர நாற்காலி வழங்க வேண்டும் என அவரிடம் கோரிக்கை வைத்திருந்த நிலையில், புதிதாக நகரும் சக்கர நாற்காலியை வாங்கி அவரது வீட்டிற்கே நேரில் சென்று சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் அவரிடம் வழங்கினார். பின்னர் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நிவாரணங்களையும், ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் கிரிக்கெட் உபகரணங்களை வழங்கினார்.

Views: - 49

0

0