துப்பாக்கியால் சுட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு

13 November 2020, 11:34 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே துப்பாக்கியால் சுட்டத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் உள்ள திருப்பாலப்பந்தல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிருபனையூர் தக்கா கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த பள்ளிவாசல் தெருவில் வசிக்கும் சையத் அனிப் என்பவரது மகன் ஹாரூன்(40) என்பவர் வீட்டில் இருந்த உரிமெம் பெற்ற கைத்துப்பாக்கி கொண்டு, அதே பகுதியை சேர்ந்த பாஷாவின் மகன் சான்(45) என்பவரை சுட்டதாக கூறப்படுகிறது.

இதில் இரத்த வெள்ளத்தில் சரித்த சானை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த திருப்பாலப்பந்தல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 21

0

0