திருச்சி: திருச்சியில் 30 லட்சம் மதிப்பிலான குட்காவை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் சமீபகாலமாக குட்கா போன்ற போதை பொருட்கள் சோதனையில் கைப்பற்றப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக சீரங்கம் பகுதியில் குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்க டீக்கடையை சுகாதார உணவு தடுப்பு பிரிவு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனைத் தொடர்ந்து வெளிமாநிலங்களில் இருந்து திருச்சிக்கு வாகனங்கள் மூலம் போதைப் பொருட்கள் கொண்டு வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் வாகன தணிக்கையை தீவிரப்படுத்த உத்தரவிட்டார். இந்நிலையில் சென்னை திருச்சி பைபாஸ் பகுதியில் உள்ள சஞ்சீவி நகர் இடத்தில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அந்த வழியாக மைசூரில் இருந்து முட்டைகோஸ் ஏற்றி வந்த லோடு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர். சோதனையில் வாகனத்தில் கிலோ கணக்கில் குட்கா, புகையிலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருள் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து வாகனத்தை பறிமுதல் செய்து திருச்சி கோட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த வாகனத்தில்
30 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு டன்னுக்கும் அதிகமான குட்கா, புகையிலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து காவல்துறையினர் அவற்றைப் பரிந்துரை செய்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருச்சியில் 30 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்
0
0