சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் கைபையை பறிப்பு:சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் சிசிடிவி காட்சிகள்
Author: kavin kumar6 November 2021, 5:57 pm
புதுச்சேரி: புதுச்சேரியில் மருத்துவமனை சென்று விட்டு சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் கைபையை பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ரெட்டியார் பாளையம் அருகே கடந்த 1ம் தேதி நெய்வேலி பகுதியை சேர்ந்த இரண்டு பெண்கள் மூலகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்று விட்டு தங்களது ஊருக்கு திரும்புவதற்காக பேருந்து நிலையம் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அப்பெண்களை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் ஒரு பெண்ணிடம் இருந்த கைபையை பறித்து சென்றுள்ளனர். மர்ம நபர்கள் கைபையை பறித்து செல்லும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்ததை அடுத்து, தற்பொது இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் எந்தவித புகாரும் அளிக்கப்படாததால் இந்த சம்பவம் குறித்து வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை..
0
0