நூதன முறையில் 5 சவரன் தாலி செயின் பறிப்பு: மர்ம ஆசாமிக்கு போலீசார் வலைவீச்சு
14 September 2020, 10:53 pmஅரியலூர்: வாரியங்காவல் அருகே நூதன முறையில் 5 சவரன் தாலிச் செயின் பறிப்பு ஈடுப்பட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் வாரியங்காவல் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மனைவி தமிழரசி வயது (60). இவர் தனது வீட்டின் முன்பு பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இன்று மதியம் கடையில் தமிழரசி தனியாக இருந்த போது அடையாளம் தெரியாத நபர் இருசக்கர வாகனத்தை தூரத்தில் நிறுத்தி விட்டு கடைக்கு வந்து பணம் கொடுத்து குடிக்க தண்ணீர் பாட்டில் ஒன்றை வாங்கியுள்ளார். பின்னர் மீதி சில்லறைகளை பெற்றுக்கொண்டவர் மேலும் பத்து ரூபாய் நோட்டை கொடுத்து 10 ஒரு ரூபாய் சில்லறை கேட்டுள்ளார்.
சில்லரை எடுப்பதற்காக தமிழரசி குனிந்த போது பின்பக்கமாக கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை இழுத்துள்ளார். சுதாரித்துக்கொண்ட தமிழரசி தாலியை கெட்டியாக பிடித்துக்கொள்ள செயினை மட்டும் பறித்துக்கொண்டு மர்ம நபர் தப்பி ஓட்டம் பிடித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த செயின் பறிப்பு அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
0
0