ஹனுமன் ஜெயந்தி விழா: பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

12 January 2021, 2:45 pm
Quick Share

வேலூர்: வேலூரில் மிகவும் பழமைவாய்ந்த வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஹனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அஞ்சநேயருக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமிதரிசனம் செய்தனர்

வேலூர் மாவட்டம், வேலூர் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மிகவும் பழமைவாய்ந்த ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் இன்று ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு பால்,தயிர் உள்ளிட்டவைகளை கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பின்னர் வடைமாலை,வெற்றிலை மாலை,துளசி மாலை ஆகியவைகளால் சிறப்பு அலங்காரங்களை செய்து வெள்ளிக்கவசம் அணிவித்து செந்தூர காப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது இதில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமிதரிசனம் செய்தனர்

Views: - 6

0

0