வெடித்த விபத்தில் கண் பார்வை பாதிக்கப்பட்ட சுகாதார பணியாளர்: இழப்பீடு வழங்க கோரி மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

27 November 2020, 6:47 pm
Quick Share

மதுரை: கொரோனோ தடுப்பு கிருமி நாசினி மிஷின் வெடித்த விபத்தில் கண் பார்வை பாதிக்கப்பட்ட சுகாதார பணியாளருக்கு இழப்பீடு வழங்க கோரி மாநகராட்சி அலுவலகம் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாநகராட்சியில் கொரோனோ தடுப்பு பணியில் தற்காலிக ஊழியராக கடந்த 8 மாதமாக பணியாற்றி வருபவர் மாரிமுத்து. இவர் தெளிப்பான் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் லைசால் உள்ளிட்ட கிருமி நாசினி திரவ பொருட்களை கலந்து கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட அழுத்தம் காரணமாக தெளிப்பான் வெடித்து சிதறி கிருமி நாசினி மாரிமுத்துவின் உடல் முழுவதும் பரவியதில் வாய் மற்றும் கண் பகுதியில் தீக்காயம் ஏற்பட்டது. இதனையடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். இதில் அவருக்கு கண் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது.

கொரோனோ தடுப்புப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு உரிய பாதுகாப்பு கவசம் வழங்கப்படாததே இதுபோன்ற பாதிப்பிற்கு காரணம் என குற்றசாட்டு எழுந்தது. மேலும் பாதிக்கப்பட்டுள்ள சுகாதார பணியாளர்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க கோரி கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது இந்நிலையில் மீண்டும் மாரிமுத்து குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வழங்க வேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு மாநாகராட்சியில் பணி வழங்க கோரி மதுரை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அரை மணி நேரம் நடைபெற்ற முற்றுகையால் பரபரப்பு ஏற்பட்டது

Views: - 0

0

0