உதகை சாலைகளில் கடும் மேகமூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி

17 November 2020, 1:57 pm
Quick Share

நீலகிரி: உதகையில் இருந்து பல பகுதிகளுக்கு செல்லும் சாலைகளில் கடும் மேகமூட்டம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் உதகை குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மேகமூட்டத்துடன் கூடிய மிதமான சாரல் மழை பெய்து வந்தது. இதனால் கடும் குளிரும் நிலவியது. தற்போது வரை பல பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால் உதகையில் இருந்து கூடலூர் செல்லும் சாலை மற்றும் சமவெளி பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலைகளில் கடும் மேகமூட்டம் காணப்படுகிறது.

குறிப்பாக வனப்பகுதிகள் ஓட்டிய சாலைகள் என்பதால் கடும் மேகமூட்டம் காணப்பட்டு அவதியுற்று வாகனங்களை இயக்கி வருகின்றனர் சாலைகளில் செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு செல்கின்றன கடும் மேகமூட்டத்தால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

Views: - 16

0

0