தமிழகத்தில் தொடரும் கனமழை: அவசர அவசரமாக நடைபெறும் மணல் மூட்டைகள் தயாரிக்கும் பணி

16 November 2020, 9:55 pm
Quick Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ள தடுப்பு பணிக்காக அவசர அவசரமாக மணல் மூட்டைகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதாக வானிலை மையம் அறிவித்து உள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் பல வெள்ள தடுப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆறு, ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டால் மணல் மூட்டைகளால் உடைப்பு சரி செய்வதற்காக ஏறத்தாழ ஒரு லட்சம் மணல் மூட்டைகளை பொதுப்பணித் துறையினர் தயார் செய்து வருகின்றனர்.

அதன்படி வெள்ளத் தடுப்பு நடவடிக்கையாக ஸ்ரீபெரும்புதூர் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் மணல் மூட்டைகள் தயாரிக்கும் பணி அவசர அவசரமாக நடந்து வருகிறது. நீர்வள ஆதாரத்துறை, பாசனப்பிரிவு, உதவி பொறியாளர் அலுவலகம் அருகே 2,500 சாக்கு பைகளில் மணலை நிரப்பி கட்டி வைத்துள்ளனர். மூட்டைகளை அடுக்கி வைக்கும் பணியில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 19

0

0