மதுரையில் இடி காற்றுடன் பலத்த மழை: நகர் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு

23 June 2021, 7:42 pm
Quick Share

மதுரை: மதுரையில் இடி காற்றுடன் பெய்த பலத்த மழையால் நகர் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை தல்லாகுளம், சிம்மக்கல், கோரிப்பாளையம், பழங்காநத்தம் மற்றும் பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட மதுரை நகர் பகுதி மற்றும் மேலூர், உசிலம்பட்டி, வாடிப்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட மதுரை மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மணி நேரமாக பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் மரங்கள் சாய்ந்து மின் வயர்கள் அறுந்து கிடப்பதால் பல இடங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அரசு ராஜாஜி மருத்துவமனை கொரோனா சிறப்பு மருத்துவமனை முன்பாக மின் வயர் அறுந்து விழுந்ததால் மருத்துவமனை முன்பாக செல்லும் வானங்கள் தடுப்புகள் அமைக்கப்பட்டு நிறுத்தப்பட்டன. இதனால் கடந்த ஒரு மணி நேரமாக அரசு மருத்துவமனை முன்பு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Views: - 104

0

0