தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகன ஊர்தி பிரச்சாரம்
21 January 2021, 1:51 pmவேலூர்: வேலூரில் சாலைபாதுகாப்பை வலியுறுத்தி காவல்துறையினர் மற்றும் வட்டார போக்குவரத்துத்துறையினர் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகன ஊர்தி பிரச்சாரம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம்,வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் காவல்துறையினர் மற்றும் வட்டார போக்குவரத்துத்துறையின் சார்பில் இருசக்கர வாகனத்தின் செல்லும் அனைவரும் காட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இதனை வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் துவங்கி வைத்தார். இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன், காவல்துறை துணை கண்காணிப்பாளர் விநாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்று வட்டார போக்குவரத்துத்துறை ஊழியர்கள் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் சென்று மக்கள் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட கூடாது, கைபேசியில் பேசிகொண்டு வாகனம் ஓட்ட கூடாது, சாலைவிதிகளை மதிக்க வேண்டும் ஆகியவைகளை வலியுறுத்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று இறுதியாக இந்த பிரச்சார பயணம் நேதாஜி விளையாட்டரங்கில் நிறைவடைந்தது.
0
0