உதவுங்கள்; உதவி தேவைப்பட்டாலும் தகவல் கொடுங்கள் உடனிருந்து உதவுகிறோம் : நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன் பேச்சு

13 January 2021, 8:48 pm
Quick Share

கோவை: கோவையில் உள்ள அறக்கட்டளைகள் மக்களுக்கு உதவி செய்யும் போது எந்த உதவி தேவைப்பட்டாலும் எங்களுக்கு தகவல் கொடுங்கள் உடனிருந்து உதவுகிறோம் என்று நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.

சிறு சேவை அறக்கட்டளையின் ஓராண்டு நிறைவை தொடர்ந்து கோவையில் பல்வேறு சேவைகளை செய்து வரும் அறக்கட்டளைகளுக்கு விருது வழங்கும் விழா ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் இன்று நடைபெற்றது. நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் எஸ்.பி.அன்பரசன் அன்பரசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விழா நிறைவு மலர் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து, பல்வேறு சமூக பணிகள் செய்து வரும் அறக்கட்டளைகள் மற்றும் தனி நபர்கள் என மொத்தம் 16 விருதுகளை அன்பரசன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன் பேசியதாவது: கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் பலரும் வெளியே வரவே அச்சப்பட்ட சூழலில், பல அறக்கடளைகள் சமூக சேவை செய்துள்ளீர்கள். உங்களை பார்ப்பதே மகிழ்ச்சியாக உள்ளது. அதில், உணவு இல்லாத மக்களுக்கு உணவு கொடுத்ததையே முக்கியமான சமூக சேவையாக பார்க்கிறேன். மேலும், அனைவருக்கும் உதவ வேண்டும். நீங்கள் உதவு செய்யும் போது எந்த உதவி தேவைப்பட்டாலும் எங்களுக்கு தகவல் கொடுங்கள் உடனிருந்து உதவுகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், துணை ஆட்சியர் முத்துராமலிங்கள், மாநகராட்சி மேற்குமண்டல உதவி ஆணையர் செந்தில் அரசன், கோவை பார்க் லேயர் இயக்குனர் மோகன் குமார், சிறு சேவை அறக்கட்டளையின் தலைவர் சரவணம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Views: - 3

0

0