தனது தந்தை மிகவும் எளிமையான மனிதர்: தந்தைக்கு வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர் மகள்

Author: Udhayakumar Raman
25 March 2021, 6:48 pm
Quick Share

விருதுநகர்: தனது தந்தை மிகவும் எளிமையான மனிதர் எனவும் , பொது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் அவர் போட்டியிடுவதாகவும் கூறி ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவிற்கு ஆதரவாக அவரது மகள் திவ்யா பிரச்சாரம்…

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்க துவங்கி அரசியல் கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தனி தொகுதியில் 40 ஆண்டுகளுக்கு பின்பு கட்சியின் சார்பில் ஸ்ரீவில்லிப்புத்தூரை சேர்ந்த அக்கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் மாதவராவ் என்பவர் போட்டியிடுகிறார். இவர் ஒரு சில நாட்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில் கொரோனா தொற்று அறிகுறியால் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

இந்நிலையில் வேட்பாளர் மாதவராவிற்கு ஆதரவாக அவரது மகள் திவ்யா கை சின்னத்திற்கு வாக்களிக்க கோரி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று கிருஷ்ணன் கோவில் தெரு, நகைக்கடை பஜார், தெற்கு ரத வீதி உள்ளிட்ட பகுதிகளில் கை சின்னத்திற்கு வாக்களிக்க கோரி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரச்சாரத்திற்கு வருகை தந்த அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரச்சாரத்தில் பொதுமக்களிடம் பேசிய வேட்பாளர் மாதவராவின் மகள் திவ்யா, கொரோனா அறிகுறி காரணமாக தனது தந்தை அவரை தனிமைப்படுத்தி கொண்டதால் தற்போது அவர் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாத நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.

தனது தந்தை மாதவராவ் இந்த மண்ணின் மைந்தர் எனவும், மிகவும் எளிமையான மனிதர் எனவும் பொது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் அவர் போட்டியிடுவதாகவும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.தன் தந்தை வெற்றி பெற்றால் சட்டமன்ற உறுப்பினருக்கான சம்பளம் முழுவதையும் தொகுதி மக்களின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.

Views: - 83

0

0