நபிகள் நாயகம் குறித்து அவதூறுப் பேச்சு இந்து முன்னணி நிர்வாகி கைது

6 February 2021, 8:40 pm
Quick Share

கோவை: நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வந்த மாவட்ட இந்து முன்னணி நிர்வாகி ஜெய்சங்கரை இன்று சிங்காநல்லூர் போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் கூறியிருப்பதாவது:- கோவையில் கடந்த 1ஆம் தேதி மாலை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் எதிரே பாஜக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த கண்டன ஆர்ப்பாட்டம் மேட்டுப்பாளையத்தில் பேசிய பாஜக பிரமுகர் கல்யாணராமன் கைதை கண்டித்து நடத்தப்பட்டது.

அந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகியான ஜெய்சங்கர் என்பவரும் பேசினார். அப்போது அவர் கல்யாண ராமன் பேசியதை சுட்டிக் காட்டி அவர் பேசினார். அதனை தொடர்ந்து இஸ்லாமிய அமைப்புகள் பலர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ஜெய்சங்கரை கைது செய்ய வலியுறுத்தி காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினரிடம் மனு அளித்தனர்.

இதனை தொடர்ந்து சிங்காநல்லூர் போலீசார் 130 – 2021 யு.எஸ் 143, 341, 270, 153 ஐபிசி பிரிவுகளின் கீழ் ஜெய்சங்கர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று மாலை ஜெய்சங்கரை சிங்காநல்லூர் போலீசார் கைது செய்தனர்.

Views: - 0

0

0