தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை குடோனில் பதுக்கல்: கடை உரிமையாளருக்கு அபராதம்

Author: Udayaraman
4 August 2021, 10:57 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை குடோனில் பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து, அவற்றை பறிமுதல் செய்தனர்.

திருச்சி காந்தி மார்க்கெட் முகமது ஜின்னா தெருவில் குடோன் ஒன்றில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்ததாக திருச்சி காந்தி மார்க்கெட் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. தகவல் அடிப்படையில்
மாநகராட்சி உதவி ஆணையர் கமலக்கண்ணன் உத்தரவின் பேரில் திருச்சி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் டேவிட் முத்துராஜ் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட சுமார் 50ஆயிரம் மதிப்புள்ள கேரி பேக்குகள், பிளாஸ்டிக் கப்புகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் உரிமையாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்வோர் மீது தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் சுகாதார ஆய்வாளர் தெரிவித்துக் கொண்டார்.

Views: - 111

0

0