வீடுபுகுந்து தாக்கி நகை பணம் கொள்ளை: மலையில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் கைது

10 July 2021, 8:59 pm
Quick Share

வேலூர்: வேலூர் அருகே வீடுபுகுந்து தாக்கி நகை பணம் கொள்ளையடித்து விட்டு மலையில் பதுங்கியிருந்த கொள்ளையர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட சைதாப்பேட்டை தோபாசாமி கோவில் தெருவை சேர்ந்த மெக்கானிக் தொழில் செய்யும் பழனி என்பவரை கடந்த 7 ஆம் தேதி இரவு சென்னையில் இருந்து பேருந்து மூலம் வந்து வீட்டுக்கு செல்லும் போது இவரை பின்தொடர்ந்து வந்த அடையாளர் தெரியாத நபர்கள் பழனி வீட்டுக்குள் நுழையும் போது பழனியை தாக்கிவிட்டுபீரோவை உடைத்து சுமார் 7 சவரன் தங்க நகைகள் 1 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை திருடி சென்று இருந்தனர்.

இது குறித்து வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் பழனி புகார் அளித்திருந்தார்.புகாரின் அடிப்படையில் வடக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் சைதாப்பேட்டை பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சைதாப்பேட்டை சுருட்டுக்காரர் தெருவைச் சேர்ந்த கார்த்தி மற்றும் கணபதி ஆகியோர் தோபா சாமி கோவில் தெருவில் இருந்து நகைகளை பறித்து ஓடுவது போன்று பதிவாகி இருந்துள்ளது.

அவர்கள் மீது ஏற்கனவே பல வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில்,சைதாப்பேட்டை மலையில் உள்ள அங்காளம்மன் கோவில் அருகே பதுங்கி இருந்த கார்த்தி, கணபதி ஆகிய 2 பேரையும் மடக்கி பிடித்தது கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 7 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் ரொக்க பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில்,”கொள்ளையடித்த நகையை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு பாறைக்கு அடியில் புதைத்து வைத்து விட்டு,ஒரு லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு காரில் சென்னை ,திருச்சி என சென்று மது குடித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.அதில் 40 ரூபாயை ஒரே நாளில் செலவு செய்துவிட்டு புதைத்து வைத்திருந்த நகையை எடுப்பதற்காக வந்தபோது போலீசில் சிக்கிக்கொண்டதாக தெரிவித்தனர்.

Views: - 296

0

0