சேர்ந்து வாழ மறுத்த மனைவியை கத்தியால் கழுத்தை அறுத்த கணவர் கைது

Author: Udayaraman
26 July 2021, 8:31 pm
Quick Share

சென்னை: ஓட்டேரியில் தன்னுடன் சேர்ந்து வாழ மறுத்த மனைவியை கத்தியால் கழுத்தை அறுத்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை புளியந்தோப்பு அம்பேத்கார் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் அஜித்குமார். இவருக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ஓட்டேரி ஈடன் கார்டன் மெயின் தெரு பகுதியைச் சேர்ந்த சந்தியா வயது 20 என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந் நிலையில் அடிக்கடி அஜித் கஞ்சா அடித்து தொடர்ந்து சந்தியாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சந்தியா அஜித்திடம் கோபித்துக் கொண்டு தனது அம்மா வீட்டிற்கு வந்துள்ளார். அஜித் பலமுறை சந்தியாவை வீட்டுக்கு வருமாறு அழைத்தும் சந்தியா வீட்டிற்கு வர முடியாது என கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அஜித் கஞ்சா அடித்து விட்டு போதையில் சந்தியாவின் அம்மா வீடு அமைந்துள்ள ஓட்டேரி ஈடன் கார்டன் மெயின் தெரு  பகுதிக்குச் சென்று சந்தியாவை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். சந்தியா வர மறுக்கவே அஜித் , தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தியாவின் கழுத்தை அறுத்து உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சந்தியா ரத்தம் சொட்ட சொட்ட அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் உடனடியாக சந்தியாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக ஓட்டேரி போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று கத்தியுடன் சுற்றித்திரிந்த அஜீத் குமாரை கைது செய்தனர்.தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 139

0

0