கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் கணவன் தூக்கிட்டு தற்கொலை

3 January 2021, 10:23 pm
Quick Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் பிஞ்சு குழந்தைகளை பறிதவிக்கவிட்டு தந்தை உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

காஞ்சிபுரம் திருப்பருத்திகுன்றம் விவேகானந்தன் நகர் பகுதியை சார்ந்தவர் மணிகண்டன்(26).கூலி தொழிலாளியான இவர் தனது மனைவி பார்வதி(23)வயது மகள்கள் பவித்ரா(5), நந்தினி(3) ஆகியோரிடன் அப்பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பார்வதி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மனவருத்தத்துடன் இருந்துவந்த மணிகண்டன் இன்று தீடிரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்து வந்த தாலுகா போலீசார் பிரேதத்தை கைபற்றி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் பிஞ்சு குழந்தைகளை பறிதவிக்கவிட்டு தந்தை உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Views: - 0

0

0