மதுகுடிக்க பணம் தராததால் ஆத்திரம்: மனைவியை கத்தியால் சரமாரியாக தாக்கிய கணவன் தப்பியோட்டம்…!!

3 March 2021, 6:31 pm
cehnnai - updatenews360
Quick Share

சென்னை: செங்கல்பட்டு அருகே மதுகுடிக்க பணம் தராத மனைவியை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு பவானி நகரைச் சேர்ந்த சுமதி என்பவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 23 ஆண்டுகள் ஆகிய நிலையில் கணவர் அகிலன் வெளிநாட்டில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் 4 மாதங்களுக்கு முன்பு வேலை ஒப்பந்தம் முடிந்து தனது சொந்த ஊரான செங்கல்பட்டுக்கு வந்துள்ளார். அகிலனுக்கு அதிக அளவில் குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதனால் பவானி நகரில் இருந்து அண்ணா நகர் 4வது குறுக்கு தெரு தெருவிற்கு சுமதி மற்றும் மகன் இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவர் தொடர்ந்து மனைவியிடம் மது குடிப்பதற்காக காசு கேட்கும் போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் அகிலன் தனது மனைவியை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இந்நிலையில், சுமதியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Views: - 9

0

0