லேசர் விளக்குகளால் ஜொலித்த ”ஐ லவ் கோவை” கோவை மக்கள் குஷி..!!

17 August 2020, 8:45 am
Quick Share

கோவை: கோவையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஐ லவ் செல்பி கார்னர் லேசர் விளக்குகளால் ஜொலிக்க செய்த நிகழ்ச்சி கோவை மக்களை குஷிப்படுத்தியுள்ளது.

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்பாலங்கள், சாலைகள், பூங்காக்கள் என பல்வேறு வளர்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், மக்கள் அனைவரிடத்திலும் தற்போது பெரும் வரவேற்பை பெற்றிருப்பது உக்கடம் பெரிய குளம் புதுப்பொலிவு பணிகள்தான். அங்கு உருவாக்கப்பட்டுள்ள ஐ லவ் கோவை, நமது மாவட்டத்தின் சின்னமாகவே மாறிவிட்டது.

கோவை மாநகரில் சிறந்த பொழுதுபோக்கு தலங்கள் இல்லாத நிலையில், அந்தப் பற்றாக்குறையை உக்கடம் பெரிய குளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு நடவடிக்கைகள் நிவர்த்தி செய்துள்ளன. எனவே, ஐ லவ் கோவையின் மீது பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பொதுமக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக, ஐ லவ் கோவை வடிவமைப்பின் மீது அதி நவீன தொழில்நுட்பத்துடன் மியூசிக்குடன், லேசர் லைட் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், ஐ லவ் கோவையின் மீது லேசர் லைட் கண்காட்சி முதல்முறையாக நடத்தப்பட்டது.

இதில், தேசத்தின் நலனுக்காக பாடுபட்ட தியாகிகளின் பெருமை போற்றும் வகையில் காணொளி காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், தேசியக்கொடியும் இந்த ஐ லவ் கோவை வடிவத்தின் மீது தத்ரூபமாக இருப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டது.

இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட அரசு விழாக்கள், மாபெரும் தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் பண்டிகை நாட்களிலும் மக்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக, ஐ லவ் கோவையில் லேசர் லைட் கண்காட்சி நடத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 21

0

0