வீடு வீடாக சென்று மருத்துவ பொருட்களை வழங்கிய ஐ.பெரியசாமி

Author: Udhayakumar Raman
5 August 2021, 5:58 pm
Quick Share

திண்டுக்கல்: தமிழக முதல்வரையடுத்து மக்களைத்தேடி மருத்துவ முகாமை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திண்டுக்கல் அருகே அம்மையநாயக்கனூரில் துவக்கி வைத்து வீடு வீடாக சென்று மருத்துவ பொருட்களை வழங்கினார்.

கொரோனா வைரஸ் பரவல் ஊரடங்கு காலங்களில் அத்தியாவசிய மருந்து பொருள்கள் கிடைப்பது தட்டுப்பாடு ஏற்பட்டது என்ற தகவலை அடுத்து தமிழக முதல்வர் “மக்களைத்தேடி மருந்துவம்”என்ற நடமாடும் மருத்துவ வசதியை துவக்கியுள்ளார். இதனையடுத்து இக்குழுவினர் வீடுவீடாகச் சென்று அந்தந்த பகுதி பொதுமக்கள் நோயாளிகளுக்கு தேவையான அத்தியாவசிய மருந்து பொருட்களை இலவசமாக வழங்குவர் என்ற திட்டத்தின்படி திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அம்மையநாயக்கனூர் பகுதியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் “மக்களைத் தேடி மருத்துவம்” துவக்க விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், மாவட்ட ஆட்சியர், மாவட்ட மருத்துவ அலுவலர், சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் விழாவை துவக்கி வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் சித்தா பிரிவின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கொரோனா விழிப்புணர்வு கண்காட்சியை பார்வையிட்டு கபசுரக் குடிநீர் அறிவுறுத்தினார். மேலும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் நடமாடும் மருத்துவ வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்து வீடு வீடாக சென்று முதியோர்களுக்கு நோயாளிகளுக்கு மருந்து பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் தேர்தல் வாக்குறுதியின்படி திமுக அரசு ஒவ்வொரு வாக்குறுதியும் படிப்படியாக நிறைவேற்றி வருகிறது அதன் ஒரு பகுதியாக வரும் 15-ஆம் தேதி முதல் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் இது போன்ற நடமாடும் மருத்துவ முகாம் பொதுமக்களை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறினார்

மேலும் நிகழ்ச்சியில் பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி, விரைவில் கூட்டுறவுத்துறையில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் வெளிப்படைத் தன்மையுடன் நிரப்பப்படும் எனவும் கூட்டுறவு சங்கங்களில் அந்தந்த பகுதி பொதுமக்கள் அனைவரும் உறுப்பினராக கட்டாயம் சேரவேண்டும் எனவும் உறுப்பினராக சேர்ந்த அனைவருக்கும் கடனுதவி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் சிறு குறு விவசாயிகள் என அனைவரும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பதிவுசெய்யப்பட்டு கண்டிப்பாக அவர்களுக்கு ஏற்றபடி கடனுதவி செய்யப்படும் எனவும் விவசாய அல்லாதவர்களும் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தார் அவர்களுக்கும் கடன் உதவி அளிக்கப்படும் எனவும் கூறினார்.

Views: - 113

0

0