நேர்மையாக செயல்பட்டு மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பேன்: அரியலூர் எம்எல்ஏ பேச்சு

4 July 2021, 4:33 pm
Quick Share

அரியலூர்: நேர்மையாக செயல்பட்டு ஏழை மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பேன் என மதிமுக மாவட்ட செயற்குழு கூட்டத்தில் அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா பேசியுள்ளார்.

அரியலூர் மாவட்ட மதிமுக செயற்குழு கூட்டம் அரியலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைப்பெற்றது. இதில் மதிமுக மாவட்ட செயலாளரும், அரியலூர் சட்டமன்ற உறுப்பினருமான சின்னப்பா கலந்து கொண்டு பேசினார். அப்போது வாக்களித்த பொதுமக்கள் மற்றும் வெற்றிக்காக உழைத்த அனைத்து கூட்டணி கட்சியினருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் நேர்மையானவர் என நினைத்து வாக்களித்த மக்களுக்கு என்றுமே நேர்மையாகவும், குறிப்பாக ஏழை மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பேன் என கூறினார். இதில் மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Views: - 80

0

0