ஐம்பொன் சிலை திருட்டு மற்றும் கொள்ளை வழக்கு: குற்றவாளி கைது

12 January 2021, 9:04 pm
Quick Share

ஈரோடு: ஈரோட்டில் ஐம்பொன் சிலை திருட்டு மற்றும் கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை போலீசார் கைது செய்தனர். ஒரு அடி உயரமுள்ள ஐம்பொன் சிலை மீட்கப்பட்டது.

ஈரோடு சாஸ்திரி நகரை அடுத்துள்ள கல்யாணசுந்தரம் வீதியில் அமைந்துள்ள ஶ்ரீ வெற்றி விநாயகர் கோயிலில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு அடி உயரமுள்ள 80ஆயிரம் மதிப்புள்ள உற்சவர் ஐம்பொன் முருகர் சிலை திருடப்பட்டது மற்றும் கடந்த டிசம்பர் மாதம் நாடார்மேடு பகுதியில் உள்ள வீட்டில் 2 லட்சம் மதிப்பிலான 1 பவுன் தங்க நாணயம் மற்றும் 3 அரை பவுன் தங்க மோதிரம் திருடப்பட்டது.

இவ்விருவழக்கில் தேடப்பட்டு வந்த கொள்ளையனை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர் இந்நிலையில் சிலை திருட்டு மற்றும் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் தேடப்பட்டு வந்த மோளப்பாளையத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர் மேலும் அவரிடமிருந்து ஒரு அடி உயரமுள்ள ஐம்பொன் சிலை மீட்கப்பட்டது கைது செய்யப்பட்ட வெங்கடேஷை போலீசார் சிறையில் அடைத்தனர்.

Views: - 6

0

0