மேட்டுப்பாளையம் மொத்த காய்கறி ஏல மண்டிகளுக்கு சீல்…

6 August 2020, 10:17 pm
Quick Share

கோவை: மேட்டுப்பாளையம் மொத்த காய்கறி ஏல மண்டிகள் நான்கு நாட்கள் செயல்பட மாவட்ட நிர்வாகம் தடை மார்க்கெட் உரிமையாளர்கள் தொழிலாளர்கள் என 13 பேருக்கு கொரானோ உறுதியானதால் மூடி சீல் வைக்கப்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அன்னூர் ரோட்டில் செயல்பட்டு வரும் மொத்த காய்கறி மண்டியின் தலைவருக்கு கடந்த மூன்று தினங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டது. இதனையடுத்து அங்கு பணியாற்ற கூடிய அணைவருக்கும் கொரானோ பரிசோதனை செய்யப்பட்டதில் மார்க்கெட்டில் மட்டும் 13 பேருக்கு கொரானோ தொற்று உறுதியாகியுள்ளது.

இதனை தவிர இங்கு வந்து பரிசோதனை செய்துகொண்ட பொதுமக்கள் 14 பேர் என மொத்தம் 27 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரானோ தொற்று உறுதி செய்யபட்டது. இதனால் காய்கறி மார்க்கெட் மற்றும் உருளைக்கிழங்கு மார்க்கெட் என இரண்டு ஏல வளாகங்களும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து கோவை வடக்கு கோட்டாட்சியர் சுரேஷ் தலைமையிலான வருவாய்த்துறையினர் முண்ணிலையில் காய்கறி வளாகம் மூடி சீல் வைக்கபட்டது. முன்னதாக ஜடையம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் காய்கறி மன்டி வளாகம் முழுவதும் கிருமினாசினியானது தெளிக்கபட்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளபட்டது. நாளை முதல்அடுத்த நான்கு நாட்களுக்கு காய்கறி மண்டிகள் உருளைக்கிழங்கு மண்டிகளும் செயல்பட மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.