பொது சுகாதார பிரிவு இருப்பு கிடங்கில் மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு

22 September 2020, 5:12 pm
Quick Share

தூத்துக்குடி: வடகிழக்கு பருவமழை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாநகராட்சி பொது சுகாதார பிரிவு இருப்பு கிடங்கில் இருப்பில் உள்ள மின் மோட்டார்கள், பிளீச்சிங் பவுடர் உள்ளிட்டவற்றை மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி பொது சுகாதார பிரிவு இருப்பு கிடங்கு தூத்துதக்குடி குரூஸ்புரத்தில் உள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருப்பில் உள்ள தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பொது சுகாதார பிரிவு கிடங்கில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் இன்று நேரில் பார்வையிட்டு வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து இருப்பில் உள்ள மின் மோட்டார்கள் பிளீச்சிங் பவுடர் உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

பின்னர் இதுகுறித்து மாநகராட்சி எப்போது சுகாதார பிரிவு அலுவலர் மருத்துவர் அருண் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கழிவுநீர் வடிகால் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், இதனால் அதிக மழை பொழிவு இருந்தாலும் தண்ணீர் தேங்கும் வாய்ப்பு குறைவு என தெரிவித்தார். மேலும் தூத்துக்குடி மாநகராட்சியில் 85 மின் மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும் பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு கலவை பொதுமான அளவில் இருப்பில் உள்ளது என்றார்.