மாநகராட்சி தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு…

14 August 2020, 9:43 pm
Quick Share

கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட தனிமைப்படுத்தபட்ட பகுதிகளில் நடைபெறும் தூய்மை பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஷரவன் குமாா் ஜடாவத் பார்வையிட்டார்.

கோவை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும் கோவை மாநகராட்சியும் எடுத்து வருகின்றன.இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி மேற்கு மன்றத்திற்கு உட்பட்ட கோகுலம் காலனி 2வது வீதி, பிஎன் புதூர், ஆர்டிஆர் வீதி, நேதாஜி ரோடு, எஸ்.என் பாளையம் ஆகிய தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் ஷரவன் குமாா் ஜடாவத் ஆய்வு நடத்தினார். மேலும் அப்பகுதியில் தூய்மை பணிகளில் ஈடுபட்ட துய்மைப்பாணியாளா்களிடம் தினமும் காலை, மாலை ஆகிய வேலைகளில் கிருமி நாசினித் ஒழிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தினர்.

மேலும் தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை பால், காய்கறி, மளிகை பொருட்கள் கிடைப்பதற்கு உரிய வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என அதிகாரிகளிடம் மாநகராட்சி ஆணையர் கூறினார். பின்னர் அப்பகுதி பொதுமக்கள் இடம் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதையும், சளி காய்ச்சல் இருமல் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்திட வேண்டும் எனத் தெரிவித்த ஆணையாளர், அப்பகுதி மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக வழங்கப்பட்ட வைட்டமின் மாத்திரைகளை சாப்பிட வேண்டும் எனும் பொது மக்களிடம் தெரிவித்தார்.

தொடர்ந்து அப்பகுதியில் நடைபெற்று வரும் சாலை பணிகள் சிறப்பு தூய்மைப் பணிகள் நடைபெறுவதை பார்வையிட்ட ஆணையாளர் தொடர்ந்து மேற்கு மண்டல லட்சுமி நகர், எஸ்.என். பாளையம் பகுதியில் சாக்கடை கழிவுநீர் கால்வாய்கள் தேங்காமல் சீராக செய்வதற்கான சிறப்பு தூய்மை பணி நடைபெறுவதை பார்வையிட்ட பின்னர், அப்பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகள் ஆத்மநிா்பாா் நிதி திட்டத்தின் மூலம் பதிவு பெற்றுள்ள சாலையோர வியாபாரிகள் பத்தாயிரம் வரை வங்கிக்கடன் பெற மாநகராட்சி மண்டலங்களில் செயல்படும் சிறப்பு முகாம்களுக்கு சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தெரிவிக்குமாறு தொடர்புடைய அதிகாரிகளுக்கும் மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.

Views: - 12

0

0